• May 01 2024

நல்ல வேளை உங்க அப்பா முதலே இறந்திட்டார்... எல்லை மீறிய கவர்ச்சியால்... லொஸ்லியா மேல் கடுங் கோபத்தில் ரசிகர்கள்...!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.


இந்த நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பிடிக்காதவர் என்று யாருமே இல்லை. இருப்பினும் இடையில் கவினுடன் காதலில் சிக்கி குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகினார். அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு இவரைக் காண வந்த தந்தை கோபத்தில் இவரைத் திட்டி இருந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.


எது எவ்வாறாயினும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது.  அந்தவகையில் இவர் நடிப்பில் 'பிரெஷன்ஷிப்' என்றார் படம் வெளியாகி இருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்நிலையில் அடக்கவொடுக்கமாக இதுவரை காலமாக இருந்த லாஸ்லியா சமீபகாலமாக கிளாமர் லுக்கிற்கு மாறி கவர்ச்சியை அள்ளி வீசி வருகின்றார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


அதாவது "ஆடையை இவ்வளவு குறைத்தும் உனக்கு படவாய்ப்பு கிடைக்காது... மறுபடியும் செய்தி வாசிப்பாளராகவே போங்க" என ஒருவர் கூறியுள்ளார். அதேபோன்று மற்றொருவர் "உங்க அப்பா இறந்த பின் மிகவும் கவலை அடைந்தேன்... ஆனால் இப்போது உங்க அப்பா இறந்ததும் ஒரு நல்லதுக்கு தான் என்று தெரிகிறது... உன் உடையெல்லாம் பார்த்து அவரு சாக தேவை இல்லை" எனப் பதிவிட்டிருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement