• Sep 25 2023

அல்லு அர்ஜுனைக் கட்டிப் பிடித்து அழுத புஷ்பா பட இயக்குநர்- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 283 படங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், விநோதய சித்தம், சார்பட்டா பரம்பரை, மாநாடு, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் போட்டிக்குத் தேர்வாகியிருந்தன.

இதில் ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.ஆனால் அப்படத்திற்குக் கிடைக்கவில்லை.லுங்கிலிருந்து ஆர்ஆர்ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்கள் நாமினேஷனில் இருந்தன. இவற்றில் ஆர் ஆர் ஆர் படம் மோஸ்ட் பாப்புலர் கேட்டகிரியில் தேசிய விருதை வென்றது.


புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சிறந்த இசையமைப்பாளர் விருதும் புஷ்பாவுக்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்து இருக்கிறது.

இதனால் புஷ்பா பட இயக்குநர் தற்போது அல்லு அர்ஜுனை சந்தித்து தேசிய விருது வென்றதற்காக மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.அவர் கண்ணீர் விட்டு அழுது அல்லு அர்ஜுனை கட்டி பிடித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement