• Dec 07 2022

கடுப்பான அமுதவாணன்...ரட்சிதாவிடம் காதலை சொல்லும் ராபர்ட்-நடந்தது என்ன..?

Listen News!
Aishu / 4 weeks ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம்தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்ற நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து 4 பேர் வெளியறி உள்ள நிலையில் தற்போது 17 பேரே உள்ளார்கள்.இந்நிலையில் 29வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர், அமுதவானன் ,மைனா ஆகிய மூவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடும் போது ரபார்ட் மாஸ்டர் முதலாவது ஆளாக வெளியேற அடுத்தது அமுதவானனும் தோத்து விட்டதாக எண்ண பிக்பாஸ் இல்லை உங்களது ஒரு கால் உள்ளே தான் இருக்கின்றது என கூற அமுதவானன் அதை நினைத்து விளையாட எண்ணுவதற்கிடையில் குறுக்குவழியில் எண்ணிய மைனா  அமுதவானனை தள்ளிவிட்டு அந்த தலைவர் பதவியை வெற்றி பெறுகின்றார்.

பின்னர் தலைவர் ஆனதும் டீம் பிரித்து முடிக்கின்றார்.ஆனாலும் தான் விளையாடுவதற்கு முன்னரே இந்த போட்டியில் இருந்து விலகிவிட்டதை நினைத்து வருந்துகிறார் அமுதவானன்.

அடுத்ததாக ஆயிஷா அழுதுபுலம்பி கொண்டு இருந்து சோர்ந்த நிலையில்  , ஜனனி அவருக்கு அறிவுரை கொடுத்தது தொடர்பான விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது.

கடந்த வார சண்டைகளுக்கு பின்னர் சற்று மனம் சோர்ந்த நிலையில், தான் இருப்பதாக ஆயிஷா தெரிவித்துஇருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்திய எபிசோடில் கூட பத்திரிக்கையாளர் போல சக போட்டியாளர் கேள்வி கேட்ட சமயத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆயிஷா தெரிவித்திருந்தார்.

அதே போல, எலிமினேஷன் நடப்பதற்கு முன்பு கூட, யார் வீட்டில் இருந்து போக வேண்டும் என கமல்ஹாசன் கேட்க, நான் தான் போக வேண்டும் என்றும் ஆயிஷா கூறி இருந்தார். அதன்பின்னர், பிக்பாஸ் வீட்டில் தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவரான ஷெரினா வெளியேறவே இதன் காரணமாக உடைந்து அழவும் செய்திருந்தார் ஆயிஷா.அத்தோடு  வழக்கம் போல இல்லாமல், சற்று மன சோர்வுடன் ஆயிஷா பிக்பாஸ் வீட்டிற்குள் இயங்கி வருகின்றார்.மேலும்  அப்படி ஒரு சூழலில், அவருக்கு அறிவுரை வழங்குகிறார் ஜனனி. "உன்னை கண்டு பயப்படும் அளவுக்கு வர வை. அசீம் அளவுக்கு இல்லை, உன்னுடைய அளவுக்கு. கெத்தா வா. மற்றவர்களை விட எனக்கு எல்லாம் தெரியும் என்று யோசி. எந்த இடத்திலும் உன்னை தாழ்த்தாதே. கோபம் வந்தால் காட்டு, இந்த மாதிரி உடைந்து விடாதே. இப்படி நீ இருப்பதற்காக உன்னை மக்கள் காப்பாற்றவில்லை. நீ மாறனும் என்பதற்காக தான் உன்னை Save செய்து வைத்திருக்கிறார்கள். உடைந்திருக்கிற நீ இன்னும் ஸ்ட்ராங்காக வரவேண்டுமென்று தான் அவர்கள் அப்படி செய்தார்கள்.

வெளியில் நம்மை பற்றி என்ன பேசுவார்கள் என்று யோசிப்பது பயமாக இருக்கும். மேலும் இங்கு நடப்பது பற்றியும் மனதில் என்னென்னவோ தோன்றும். எல்லா இடத்திலும் ஸ்ட்ரைட்டா இருப்போம், என்ன ஆனாலும் ஓகே என்று இருந்து பார். அப்படி இருக்கையில் ஒரு விஷயமாவது நமக்கு பாசிட்டிவ் ஆக வராதா. எல்லாரையும் நம்பாதே, ஆனா நடி. யாராச்சும் ஏதாவது சொன்னா ஓகே ஓகே அப்படின்னு சொல்லிட்டு போ" என அசத்தலான அறிவுரையை ஆயிஷாவுக்கு வழங்கி உள்ளார் ஜனனி.

அதற்கு பிறகு நாமினேசன் நடந்துச்சு.ஆரம்பத்தில் ஆயிஷா அசீம் பெயர் தான் வரும் ஆனால் இந்த ADK பெயர் தான் முதலில் வந்தது.அது அனைவருக்கும் ஷாக்காகவே இருந்தது.கடைசியிாக ஆயிஷா அசீம் பெயர் வந்தது.அதைப் பற்றி இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.என்ன இது புதுசா வந்து இருக்கு முதல் பெயராக வர வேண்டியது கடைசி பெயராக வந்து இருக்கு.இவ்வாறாக நாமினேசன் லிஸ்றில் ADK ராம் மகேஸ்வரி விக்ரமன் ஆயிஷா அசீம் என தேர்வாகி இருந்தனர்.

இதன் பின்னர் ஒரு டாஸ்கில் வெற்றி பெற்ற தனலட்சுமிக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு FREE advice கொடுக்க சொல்லி இருந்தது.அதைப் போலவே குஷியான தனலட்சுமி எல்லோருக்கும் கொடுக்க விக்ரமன் வாங்க உங்க கூட தனியாக பேச வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார்.அதன் படி அவரும் தனலட்சுமிக்கு அட்வைஸ் கொடுத்து விட்டார்.

அதன் பிறகு ரச்சிதா-ராபர்ட் மாஸ்டர் விசயம் தான்.இதைப் பற்றியும் தனலட்சுமி கூறி இருந்தார்.இதன் பின் ரட்சிதா பக்கம் ராபர்ட் மாஸ்டர்  செல்ல ரட்சிதா இப்ப தான் அந்த பிள்ளை சொல்லிச்சு அதுக்கிடையில் வந்து நிண்டுடீங்களா என கேட்க ராபர்ட் மாஸ்டர் செல்லமாக கோவித்து சிவினை நடுவில் வச்சு பேசிக்கொண்டு இருந்தார்.

இதன் பின்னர் அப்செட் ஆன ரட்சிதா இதைப் பற்றி பேசி இருந்தார்.அவர் பேசாமல் இருப்பது அவருக்கு  கவலையாக உள்ள நிலையில் ராபர்ட் மாஸ்டரை அழைத்து பேசுகின்றார்.ராபர்ட் மாஸ்டரும் எனக்கு உன்னை பிடிக்கும் என்று கூற ரட்சிதாவும் எனக்கும் எல்லாரையும் பிடிக்கும் என கூறுகின்றார்.இதற்கு ராபர்ட் மாஸ்டர் மற்றவங்களை பிடிக்கிறதிற்கும் உங்களை பிடிக்கிறதிற்கும் வேற அதை புரிஞ்சிக்க என வெளிப்படையாக கூற ரட்சிதா மழுப்பி மழுப்பி பேசுகின்றார்.அப்பிடி நீங்க இருங்க ஆனால் நோர்மலா இருங்க என ரட்சிதா கூறுகின்றார்.வெளியில் ஆள் இருந்தும் ஏன் இப்படி ராபர்ட் மாஸ்டர் செய்கின்றார் என்பது தான் புரியவில்லை என ரசிகர்கள் பலரும் குழம்பிய நிலையில் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.