• Apr 27 2024

பத்துத் தல இசை வெளியீட்டு விழாவில் தெறிக்க விட்ட ரசிகர்கள்- மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'பத்து தல'. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதில் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி, ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், TJ அருணாச்சலம், அணு சித்தாரா, நடிகர் சென்ராயன், இயக்குனர் ஒலிம்பி கிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


மேலும் சிம்புவின் ரசிகர்கள் அலைகடல் போல், நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடி உள்ளனர்.இந்த நிலையில் சிம்பு மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.சிம்பு என்ட்ரி கொடுக்கும் போது ரசிகர்கள் போன்லைட் மட்டும் அடித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement