• Apr 15 2025

வசூலில் ஜெட் வேகம் பிடித்த ‘மர்மர்’...! – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஹாரர் படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படும். குறிப்பாக , அரண்மனை , காஞ்சனா, பீட்சா, டார்லிங் போன்ற ஹாரர் படங்கள் மாறுபட்ட திகில் கதைகளுடன் மக்கள் மனதைக் கவர்ந்தன.

அந்தவகையில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும்  ‘மர்மர்’ படம் ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


‘மர்மர்’ திரைப்படம் வெளியான இரண்டாவது நாளே ரூ.1.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சாதனை என்றே கருதுகின்றனர். திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், வார இறுதியில்அதிகளவு வசூல் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சுவாரஷ்யமான திரைக்கதை, பயமுறுத்தும் காட்சிகள் மற்றும் பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் ‘மர்மர்’ திரைப்படத்திற்கான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பலரும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தரமான திகில் படமாக வலம் வருவதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக, ஹேமந்த் நாராயணனின் இயக்கத்திற்கு அதிகளவு பாராட்டுகள் கிடைத்துள்ளன.

Advertisement

Advertisement