• May 18 2024

பிக் பாஸ் 6ல் நுழையும் பிரபல ஆண் Youtuber-உறுதியாக வெளிவந்த தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ம் சீசன் அடுத்த மாதம்  ஆரம்பமாக உள்ளது. அதனால் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என தகவல்கள் ஆரம்பமாகி உள்ளது. இதனால் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து வருகிறது.

வந்திருக்கும் தகவல்களின்படி பிக் பாஸ் 6 வரும் அக்டோபர் 2ம் ஆரம்பமாகும் என  தெரிகிறது. இந்த சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இருக்க கூடாது என்பதற்காக பல முன்னணி சர்ச்சை பிரபலங்கள் போட்டியாளராக கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு பிரபல youtube பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது உறுதியாகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.



ஜி.பி.முத்து தான் பிக் பாஸ் 6ல் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அது அதிகாரபூர்வ தகவல் வந்தால் தான் உறுதியாகும்.

மேலும் அவர் கடந்த சீசனே பிக் பாஸ் போட்டியாளராக வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர் கடைசியில் வரவில்லை. இந்த வருடமாவது அவர் வருகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.  

Advertisement

Advertisement