• Apr 27 2024

ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல கன்னட நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.இதனிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு முக்கிய நடிகர் இணைந்துள்ளதை அறிவித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ்.


 கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கூட அண்மையில் வெளியாகிய வீடியோ ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

ஜெயிலர் படத்திற்கும் அனிரூத் தான் இசையமைத்து வருகின்றார்.இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement