• May 10 2024

முத்து சொல்லுங்கோ உங்களுக்கு என்ன பிரச்சினை- நேரடியாகவே கேட்ட கமல்- எமோஷனலான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சின்னத்திரையில்  மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பி வருகிறது பிக் பாஸ். 100 நாட்கள் பிரபலங்களை ஒரு தனி வீட்டில் தங்க வைத்து அவர்களின் நடவடிக்கையை மொத்த உலகமும் கவனிப்பது தான் இந்த ஷோவின் நோக்கமே.

தற்போது தமிழில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்பவர்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாவது வழக்கம். அந்த ஆசையில் தான் பலரும் இதில் பங்கேற்று வருகின்றன.


தற்போது 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 துவங்கிய ஒரே வாரத்தில் சண்டை சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தவர்களின் அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டனர் போட்டியாளர்கள்.

இந்த சீசனில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் ஜி.பி முத்து.இந்த நிகழ்ச்சியில் அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த GP முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறியிருந்தார்.இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், கமல்ஹாசனிடம் கண்கலங்கியபடி பேசியிருக்கிறார் முத்து. அதில் கமல்ஹாசன் பேசுகையில்,"முத்து, நீங்க அலைபாஞ்சுகிட்டே இருக்கீங்க.. நாலஞ்சு நாட்களாக அது அதிகமான மாதிரி எனக்கு தோணுது. சொல்லுங்க என்ன பிரச்சனை?" எனக் கேட்கிறார்.இதற்கு பதில் அளித்த முத்து,"எனக்கு என் பையனை பாக்கணும். உடம்பு சுகமில்லை அவனுக்கு" என்கிறார்.

 தொடர்ந்து பேசும் கமல்,"உங்களை ரசிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்க. இதை உங்க பிள்ளைகள் கேட்டுட்டு இருக்காங்க. விஷ்னு கேட்டுட்டு இருக்காரு இந்த கைதட்டல்களை எல்லாம். உங்க முடிவு என்ன?" என நேரடியாக முத்துவிடம் கேட்கிறார். அப்போது கண்கலங்கியபடி பேச முற்படுகிறார் முத்து.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement