• Oct 18 2024

'எதிர்நீச்சல்’க்கு பிறகு வாய்ப்பு இல்லை.. பிகினியில் களமிறங்கிய கனிகா..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

‘எதிர்நீச்சல்’ சீரியலில் குடும்ப பங்கான ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்த நடிகை கனிகா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி காஸ்ட்யூமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடித்த ’வரலாறு’ சேரன் நடித்த ’ஆட்டோகிராப்’ மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ உள்பட சில தமிழ் படங்களிலும் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை கனிகா.

சன் டிவி, விஜய் டிவி போன்ற தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்ட கனிகாவுக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் அவர் ஈஸ்வரி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்ததிலிருந்து நடிகை கனகா ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் இன்று திடீரென பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகி உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

எதிர்நீச்சல் சீரியலுக்கு பின் வாய்ப்பு இல்லாததால் நடிகை கனிகா, பிகினியில் இறங்கிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.


Advertisement