• May 13 2024

எருமை சாணி யூடியூப் நடிகர் விஜய்யின் வருங்கால காதல் மனைவி இவர் தானா?- வைரலாகும் நிச்சயதார்த்தி வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

எருமை சாணி என்ற யூடியூப் தளத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் விஜய். இவரின் நகைச்சுவை பேச்சு,நடிப்பு  ஆகியவை பெண்களை அதிகமாக கவர்ந்தால் இவருக்கென தனி ரீச் ரசிகர்களிடையே உருவானது.

இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால் பதித்த இவர்  ஹிப் பாப் தமிழா ஆதி நடித்த மீசையை முறுக்கு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்த வருடம் வெளியாகியிருந்த  டி பிளாக் படத்தை எழுதி இயக்கி இருந்தார் 


அருள்நிதி இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். டி பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் அருள் நிதியின் நண்பராக விஜய்யும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

அதாவது தனது நீண்ட நாள் காதலியான நட்சத்திராவை கூடிய விரைவில் விஜய் கரம் பிடிக்கவுள்ளார். ’பொண்ணு பாக்குற மொமண்ட ’என்ற கேப்ஷனுடன் நட்சத்திரா வீட்டில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை விஜய் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.


விஜய் மட்டுமில்லை நட்சத்திராவும் மீடியாவில் தான் இருக்கிறார். மாடலிங், விலாகர், ஃபேஷன் டிசைனர்  நடிகை என பலமுகங்களை கொண்டவர் நட்சத்திரா.இருவருக்கும் எளிமையான முறையில் வீட்டில் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. இதற்கு இருவரின் நண்பர்களும், மீடியா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement