• Oct 09 2024

ஏம்மா ஏய்- எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவை பங்கம் பண்ணிய பாலா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாலா.முதலில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து அதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார்.

காமெடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சந்தானம் கையால் விருதெல்லாம் பெற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செம ரகளை செய்து வந்தார்.அண்மையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு அம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். அத்தோடு தன்னுடைய பெற்றோரின் 60ம் கல்யாணத்தையும் சிறப்பாக கொண்டாடியிருந்தார்.


இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் பாலா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது எதிர் நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement