• May 15 2024

குடி பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த சூப்பர் ஸ்டார்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து, நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட், போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். 

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தயாரிப்பாளர்கள் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஜாக்கி செரீப்,  நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ரஜினிகாந்த் மேடையில் மிகவும் சுவாரசியமாக பல விஷயங்கள் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.  

 மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம், எனவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

ஒருவேளை குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன் என உருக்கமாக பேசிய ரஜினிகாந்த், அதற்காக குடிக்க வேண்டாம் என்பது இல்லை... எப்போதாவது குடிங்கள். இந்த குடிப்பழக்கம் உங்களுடைய அம்மா, பொண்டாட்டி, குடும்பத்தில் இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என பேசியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement