தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விறுவிறுப்பபாக நடந்த வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்தும் அடிக்கடி தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அத்தோடு இப்படத்தின் டைட்டில் ஆனது தளபதி விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் மீண்டம் கூட்டணி அமைக்கவுள்ளார். அதன்படி விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் தான் இயக்கவுள்ளார்.
அதன்படி தளபதி 67 படத்தின் அறிவிப்பும் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- இல்லாத என்ன பற்றி பேச நீங்க யாரு-தன்னை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி
- சின்ன பசங்களோட சேர்ந்து மசாலா படம் பண்ணியிருக்கிறாங்க-விக்ரம் படத்தை கழுவி ஊற்றிய புஃளூ சட்டை மாறன்
- 10 நாள் முடிவில் விக்ரம் படம் செய்த சாதனை-குஷியில் படக்குழு..!
- கல்யாணப்பெண்ணாக மாறிய சுந்தரி சீரியல் கேப்ரில்லா-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!