• Oct 08 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தன் நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் தனுஷ்.இவ்வாறு இருக்கையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'தி கிரே மேன்' கடந்த 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' போன்ற பிரமாண்டமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரூசோ பிரதர்ஸ், 'தி கிரே மேன்' படத்தை இயக்கியுள்ளனர்.மேலும் ஹாலிவுட் பிரபலங்கள் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் கோலிவுட் அசுரன் தனுஷும் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அத்தோடு 'தி கிரே மேன்' படம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடமும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கெல்லாம் ஒரே காரணம், தனுஷும் இந்தப் படத்தில் கமிட் ஆகியிருந்தது மட்டுமே. இதனால், 'தி கிரே மேன்' படம் வெளியாகும் முன்னரும் சரி, இப்போதும் சரி தனுஷ் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

தி கிரே மேன் படத்தில் தனுஷின் கேரக்டர், செம்மையாக செட்டாகி இருக்கிறது.மேலும் அவிக் சேன் என்ற பாத்திரத்தில் கொடூரமான கேங்ஸ்டர் லீடராக வரும் தனுஷ், கெட்டவனாக இருந்தாலும் குழந்தைகள், பெண்களை கொலை செய்வதில் விருப்பம் இல்லாத நல்லவனாகவே அதில் நடித்திருந்தார். அதேபோல், தனுஷின் இன்ட்ரோ சீனும், 'ஹலோ மை செக்ஸி தமிழ் ஃபிரண்ட்' என கிறிஸ் எவன்ஸ் தனுஷை அழைக்கும் காட்சியும் அவரது ரசிகர்களுக்கு டபுள் டமக்காவாக இருந்தன.

மேலும் தனுஷுக்கு இரண்டே சீன்ஸ் தான் என்றாலும், அதிலும் அவர் ஆக்சனில் செம்மையாக ஸ்கோர் செய்து மாஸ் காட்டியிருந்தார் என்று தான் கூற வேண்டும். ரியான் கோஸ்லிங் தனுஷை 'பொடிப்பையன்' என கலாய்க்க, பதிலுக்கு தனுஷ் அவரை போட்டு பொளந்துகட்டும் ஃபைட் சீக்குவென்ஸ் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. க்ளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியிலும் கிறிஸ் எவான்ஸ் கோட்டைக்குள் ஒத்தையாக என்ட்ரி ஆகும் தனுஷ், அங்கும் கெத்து காட்டியிருப்பார்.

இதனிடையே, 'தி கிரே மேன்' படத்தில் சிறப்பாக நடித்துவிட்டால், அது இன்னும் பல இந்திய நடிகர்களை ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்க வழிவகுக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஒரு இண்டர்வியூவில் பேசியிருக்கும் தனுஷ், "என்னை இனி தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர் என சொல்ல வேண்டாம், இந்திய நடிகர் என்றே அழைக்கலாம்" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement