• May 13 2024

“அந்த விடயத்திற்காக வாழ்க்கைய இழக்க வேண்டாம்": நடிகை கெளதமி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற  பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்தவர் தான் கெளதமி.1988ல் வெளியான 'குரு சிஷ்யன்' படம் மூலம் நடிகையாக அறிமுகமான கெளதமி, தமிழில் முன்னணி நடிகையாக கலக்கியவர். திரைத்துறையில் தொன்னூறுகளில் டாப் கியரில் சென்றது கெளதமியின் பயணம், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் என முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் நாயகியாக வலம் வந்த கெளதமிக்கு, அவரது 35வது வயதில் மார்பக புற்றுநோய் . அதில் இருந்து அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்துள்ளார்.



அத்தோடு கமலுடம் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த கெளதமி, தற்போது அவரது மகளுடன் வசித்து வருகிறாராம். இவ்வாறுஇருக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திய பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கெளதமி கலந்துகொண்டு பல விடயங்களை  பேசினார்.



 அப்போது அவர், சில வினாடிகள் மட்டுமே நாவில் நிற்கும் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்கிட வேண்டாமென பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.



எனினும் அதனைத் தொடர்ந்து திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது "இயற்கை விவசாயத்தை தவிர்த்து விளைவிக்கப்படும் பொருட்கள், சுவை கூட்டப்பட்ட உணவு பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய உணவுகள் மூலம் கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி நாம் அவற்றை மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம்" என தெரிவித்தார்.



 இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "எனவே பொதுமக்கள் அப்படியான உணவுகளை தவிர்த்து இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். நமது பாரம்பரியமான உணவு முறைகளை பின்பற்றி இன்னும் பிறக்காத குழந்தைகளின் வாழ்க்கையையும் நாம் மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். 

மேலும்  இது போன்ற பிரச்சாரத்தை கேட்பவர்களில் ஆயிரம் பேரில் ஒரே ஒருவர் பின்பற்றினால் கூட படிப்படியாக உணவு முறையில் மாற்றம் ஏற்படும்? என்று தெரிவித்தார். நடிகை கெளதமி Life again foundation என்ற நிறுவனத்தை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement