• Apr 16 2025

“லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்” நயன்தாராவின் புதிய அறிக்கை..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக புகழ்பெற்ற நயன்தாரா தனது ரசிகர்களிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இயக்குநர் விக்கினேஷ் சிவனை திருமணம் செய்து மிகவும் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர் சினிமா தவிர்த்து பல business இலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.


இவரது அபூர்வ வளர்ச்சி அனைத்து பெண்களிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வந்தனர். பல படங்களிலும் கூட இவரது பெயரின் முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என போடப்பட்டு வெளியாகியிருந்தது.


இந்த நிலையில் இவர் தற்போது ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் “நீங்கள் பலரும் என்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என அன்புடன் அழைத்து வாழ்த்தி இருக்கிறீர்கள்; ஆனால் இனிமேல் என்னை ‘நயன்தாரா' என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏனெனில், ஒரு நடிகையாக மட்டுமன்றி தனி நபராகவும் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமானது” என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement