நடிகர் தனுஷ் தற்போது பல படங்களை தானே இயக்கி நடித்து வருகின்றார். இவருக்கு நடிகராக கிடைத்த வரவேற்பை விட இயக்குநராக பலத்த வரவேற்பு கிடைத்து வருகின்றது. சமீபத்தில் இவர் அறிமுக நடிகர்கள் பலரை வைத்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ஓரளவான வரவேற்பினை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் தனுஷிற்கு 14 கோடி ரூபா அட்வான்ஸ் கொடுத்து படம் பண்ணுவதற்காக பேசியிருந்தார். இப் படத்தினை இயக்குநர் h .வினோத் இயக்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் இயக்குநருக்கு அழைப்பு விடுத்து தனது இறுதி படத்தினை இயக்குவதற்காக கேட்டிருந்தமையினால் தனுஷ் அந்த படத்தினை முடித்துவிட்டு தனது படத்தினை தொடங்குமாறு பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
பின்னர் தான் படத்திற்கு வேண்டிய பணத்தினை தயாரிப்பாளரிடம் திரும்பி கொடுத்த போதும் அவர் அதனை வேண்டாமல் மறுத்துள்ளார். விஜய் படம் முடிந்ததும் ஒரு வருடத்தின் பின்னர் உடனடியாக தனுஷ் படத்தினை எடுப்பதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
Listen News!