• Feb 05 2026

பிக்பாஸ் விசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றனரா?- வெளியாகிய குடும்பப் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவர் தற்பொழுது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.


இதில் இவர் விளையாடும் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு அளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு இவர் விளையாடி வரும் ஸ்ராட்டஜியும் நன்றாக உள்ளது.


கெரியரில் பிஸியாக இருந்தாலும் குடும்ப வாழ்விலும் குறையாக அக்கறை செலுத்தி வருகின்றார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்பொழுது இவரது குடும்பப் போட்டா வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement