• Apr 27 2024

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்படியொரு கியூட்டான தங்கை இருக்கின்றாரா? -அப்படியே அக்காவைப் போலவே உள்ளாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான இளம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிதம் மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர்.

இவ்வாறு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தளபதியின் 66 வது படத்திலும் நடித்து வருகின்றார்.

அத்தோடு இவர் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பால் தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார். அந்த வகையில் அமிதாப் பச்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவின் தங்கை ஷிமம் மந்தனாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் பார்க்க, நடிகை ராஷ்மிகா சிறு வயதில் எப்படி இருந்தாரோ, அச்சு அசல் அப்படியே அக்காவை உரித்து வைத்திருக்கிறார் தங்கை ஷிமம் மந்தனா என கூறி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement