• May 12 2024

பெப்சி உமாவை ஞாபகம் இருக்கா?.. பிரபல நடிகையுடன் தற்போது எப்பிடி உள்ளார் பாருங்க..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளராக இருந்தவர் தான் பெப்சி உமா. அத்தோடு இவர் 15 வருடங்களாக பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் இந்த நிகழ்ச்சியை தவிர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. பெப்சி உமாவிற்கு ஹீரோயின்களுக்கு சமமாக ரசிகர் பட்டாளம் இருந்தது.

இவ்வாறுஇருக்கையில்  நடிகை ரேகா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெப்சி உமாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பகிர்ந்து..“குழந்தை பருவ கனவு ஒன்று நினைவானது ஆண்களில் அஜித் அவர்களையும் பெண்களில் பெப்சி உமா அவர்களையும் சந்திக்க வேண்டும் என்பது தின கனவாகவே இருந்தது.அந்தக் கனவு நேற்றைக்கு நிஜமானது.நான் இத்தனை ஆண்டு காலம் அவர்களை கொண்டிருந்த கற்பனை மொத்தத்தையும் அவர்களிடம் சொல்லி விட்டேன் 15 நிமிட உரையாடலில் ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் நான் வசித்து வருகிறேன்.இருந்தும் ஒரு முறை கூட அவர் வெளியில் வந்து பார்த்ததே இல்லை.நேற்றைக்கு அதைச் சொன்னவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டு உண்மைதான் நான் வெளியே வருவதில்லை.வீட்டுக்கு வாருங்கள் என்று அன்போடு அழைத்த அந்த அழகிக்கு என் வாழ்த்துகள்.

உங்கள் கொஞ்சும் குரல்.உங்கள் அழகிய தமிழ்.உங்கள் ஆடை.நீங்கள் வைத்திருக்கும் மல்லிகை பூ என உங்களை நேசிக்க ஆயிரம் உண்டு ஆதலாலேயே உங்களை பெண் தொகுப்பாளர்களில் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் அதை எப்போதும் மகிழ்ச்சியோடு பாராட்டுவேன்.வாழ்த்துகள் அக்கா...என பதிவிட்டுள்ளார்.

எனினும் தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம். 



Advertisement

Advertisement

Advertisement