• Oct 03 2025

திருநங்கையின் புகாரால் பரபரப்பில் சின்னத்திரை பிரபலம்....!யார் அந்த பிரபலம் தெரியுமா?

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் பாலியல் புகார் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திருநங்கை ஒருவர் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளார். அதில், “நாஞ்சில் விஜயன் என்னை நெருங்கி பழகினார். பல்வேறு உணர்ச்சி வாரியாக பேசி நம்பிக்கை அளித்தார். பின்னர் பாலியல் உறவுக்காக அழுத்தம் கொடுத்தார். எனது சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டபின், திருமணம் செய்வதாக கூறியும், பின்னர் என்னை தவிர்த்து விட்டார். தற்போது தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டார். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.


இப்புகாரை பெற்றுக்கொண்ட பொலிஸார், இது தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளனர். நடிகர் நாஞ்சில் விஜயனிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகாராளரின் பாதுகாப்பிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடிகர் நாஞ்சில் விஜயனின் பதில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவி வருகிறது. மேலும் விசாரணையின் அடிப்படையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement