• Apr 02 2025

அட நம்ம ஓவியா கண்ணு யாருக்கு சப்போர்ட் பண்ணுறாங்க தெரியுமா? அவரே போட்ட பதிவு வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் இறுதியாக எட்டு போட்டியாளர்கள் காணப்பட்டார்கள். தற்போது மீண்டும் பழைய போட்டியாளர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது தீபக், ஜாக்குலின், சவுந்தர்யா, அருண், முத்துக்குமரன், ரயான், விஷால் ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களை தொடர்ந்து வந்த போட்டியாளர்களாக ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, வர்ஷினி வெங்கட், ரியா தியாகராஜன், சாச்சனா மற்றும் சிவகுமார்  ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளார்கள்.

இறுதியாக நடைபெற்ற டிக்கெட் டுபினாலே டாஸ்க்கில் ரயான் வெற்றி பெற்றார். இதனால் அவர் முதலாவது போட்டியாளராக பைனலுக்குள் நுழைந்தார். இவரை தொடர்ந்து இன்னும் நான்கு பேர் பைனலுக்குள் நுழைய உள்ளார்கள். அது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.


அதேவேளை தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பழைய போட்டியாளர்களும் இரண்டு பேர் ஏற்கனவே இருந்த போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் மாற்றப்படலாம் என்ற அறிவித்தலை வர்ஷினி வெங்கட் நேற்றைய தினம் தெரிவித்து இருந்தார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மரண பீதியில் காணப்பட்டார்கள்.


இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக காணப்படும் சௌந்தர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் ஓவியா. 

இது தொடர்பில் அவர் தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்ட மெசேஜ் ஒன்று வைரலாகி உள்ளது.. இதை பார்த்த ஓவியாவின் ரசிகர்களும் சௌந்தர்யாவுக்கே தமது ஆதரவை தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement