• Jan 27 2023

சூர்யாவை விரட்டி விட்டு பிரபல வாரிசு நடிகரை மடக்கிப் பிடித்த இயக்குநர் பாலா- வணங்கான் பட ஹுரோ யார் தெரியுமா?

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் கூட்டணி அமைத்து வணங்கான் என்னும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பும் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு முதலாம் கட்டப் படப்பிடிப்பானது நடைபெற்றது.

இருப்பினும் பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


 மேலும் சூர்யா விலகினாலும் 'வணங்கான்' படத்தை இயக்குவதில் உறுதியாக உள்ளார் பாலா. அதன்படி லேட்டஸ்ட் தகவலாக சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவே ஹரி, சூர்யா இணையும் 'அருவா' படம் டிராப் ஆன போது அருண் விஜய் நடிப்பில் 'யானை' படத்தை இயக்கினார் ஹரி. 

இந்நிலையில் தற்போது மீண்டும் சூர்யா ரிஜக்ட் செய்த கதையில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். மேலும் சமீபகாலமாக அருண் விஜய் மார்கெட் சரிவை சந்தித்து வருவதால் 'வணங்கான்' படம் பாலா, அருண் விஜய் இருவருக்கும் தரமான கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் எனடபதைக் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement