• May 08 2024

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் தெரியுமா..? அட அதுவும் இவரா..? நம்பவே முடியல..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் உள்ள பிரபல பாடகர்கள், பாடகிகள் மத்தியில் அதிக சம்பளம் வாங்குபவராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் அவர் ஒரு பாட்டு பாட ரூ. 3 கோடி வாங்குகிறாராம். அதுமட்டுமல்லாது பிற பாடகர்களை விட 10 மடங்கு அதிகம் வாங்குவதாகவும் கூறப்படுகின்றது.


இவர் தவிர்ந்த ஏனைய பாடகர்களில் ஒரு சில பிரபல பாடகர்கள் பாடல் ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களோ பாடலுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை மட்டுமே வாங்குகிறார்களாம். ஆனால் ரகுமான் ஒரு பாட்டுப் பாட மட்டுமே 3கோடி சம்பளம் வாங்குவது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் ஏ.ஆர். ரகுமான் சில நேரங்களில் ஒரு பாடல் பாட ரூ. 5 கோடி கூட வாங்குவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அத்தோடு படங்களில் பாட ரூ. 3 கோடி வாங்கும் ஏ.ஆர். ரகுமான், இசை நிகழ்ச்சிகளில் பாட ரூ. 1 கோடிக்கு மேல் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. 


இவ்வாறாக மேடையில் பாட அதிக சம்பளம் வாங்கும் நபராக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement