• Apr 15 2026

இயக்குனர் ராஜு முருகனின் அடுத்த படத்தின் ஹீரோ யாருனு தெரியுமா ?

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

2014 ஆம் ஆண்டு "குக்கூ" திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தார் இயக்குனர் ராஜு முருகன்.முதல் படத்திலேயே கதையின் முக்கியத்துவம் மற்றும் நடிகர் தெரிவென்று தமிழ் திரையுலகே வியக்கும் அளவுக்கு ஓர் படத்தை கொடுத்திருந்தார் ராஜு முருகன்.


தொடர்ந்து தோழா,ஜோக்கர் என பெரும் பாராட்டுகளை பெற்ற படங்களை இயக்கி கதைக்களத்திற்க்கான பெரும் வரவேற்புடைய இயக்குனராக தமிழில் அறியப்பட்டார் ராஜு முருகன்.இவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பெரும் வரவேற்புக்குரிய விடயமாகும்.


அடுத்து ராஜு முருகனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் "மதர் இண்டியா" படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன."டாடா" படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் இப் படத்தில் நடிகை சைத்ரா தமிழில் அறிமுகமாகிறார்.


Advertisement

Advertisement