• May 19 2024

காதல் மனைவியின் ஆசைக்காக விஜய் நடித்த திரைப்படம் எது தெரியுமா?- அடடே இந்தப் படமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய்யின் லியோ படத்துக்கு இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில், 19ம் தேதி ரிலீஸாகும் லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

 இதனால் விஜய் ரசிகர்கள் போட்டிப்போட்டு லியோ டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர்.Seven Screen Studio தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.


இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது.படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகும் என்று நம்பப்படுகின்றது.

மேலும் விஜய் பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தனது மனைவியுடன் கலந்து கொண்டிருக்கின்றார். தற்போது தனது மனைவி ஆசைக்காக விஜய் நடித்த ஒரு படம் குறித்து தகவல் வந்துள்ளது.அதாவது சங்கீதாவுக்கு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ரொம்பவே பிடிக்குமாம். 

எனவே அவரது இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம்.கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்வரை தனது ஆசையை விஜய்யிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தாராம் சங்கீதா. 


ஏ.எல். விஜய்யை அழைத்து ஏதாவது கதை இருக்கிறதா என விஜய் கேட்க அவர் தலைவா கதையை சொல்லியிருக்கிறார்.அப்படி தான் விஜய் தலைவா படத்தில் நடித்துள்ளார், அப்படத்தால் பல பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement