• May 18 2024

ஓடிடியில் வெளியாகிறது 'அவதார்-2' திரைப்படம்... எப்போ தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அவதார்.இப்படம் உலகளவில் 2.7 பில்லியன் வரை வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.

இதுவே உலகளவில் அதிகம் வசூல் செய்த படம் என்று முதலிடத்தில் உள்ளது. முதல் பாகத்தை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளிவந்தது.


அந்தவகையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது. 


இந்நிலையில இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement