• May 18 2024

லியோ ட்ரெய்லரைப் பார்த்த சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார் தெரியுமா?- உண்மையை உடைத்த லோகேஷ்

stella / 7 months ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் தான் லியோ. மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைதது லோகேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார்.. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தலைவர் 171 ஷூட்டிங், 2024 பிப்ரவரி மாதம் தொடங்கும்  எனக் கூறப்படுகின்றது.லியோ ரிலீஸானதுமே தலைவர் 171 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்கவுள்ளாராம் லோகேஷ். 


இந்நிலையில் லியோ ப்ரோமோஷன் பேட்டிகளில் தலைவர் 171 பற்றியும் சில தகவல்களை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதேநேரம், லியோ படம் பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷிடம் பேசியது தற்போது தெரியவந்துள்ளது. தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ்ஜை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் ரஜினி. அப்போது லியோ ட்ரெய்லரை பாராட்டிய சூப்பர் ஸ்டார், "ஆல் தி பெஸ்ட் லோகேஷ்... லியோ வெற்றி பெற வாழ்த்துகள்" என க்யூட்டாக விஷ் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து எதிர்பாராத நேரத்தில் வந்த வாழ்த்துச் செய்தியால், லோகேஷ் கனகராஜ் செம்ம உற்சாகமாக காணப்படுகிறார். அதேநேரம் தலைவர் 171 கதையை விஜய்யிடம் சொல்லி, அதற்கும் தளபதியிடம் இருந்து பாராட்டு வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement