• Sep 25 2023

லியோ பட வில்லன் நடிகர் சஞ்சய் தத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் வெளியான முன்னா பாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சய் தத்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் கலக்கினார்.

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சஞ்சய் தத் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சஞ்சய் தத், மும்பையில் நர்கிஸ் தத் சாலையில் ரூ. 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வீடு மட்டுமில்லாமல் மும்பையில் இன்னும் சில வீடுகள் இவருக்கு இருக்கிறது நிறைய அயல்நாட்டு சொகுசு காரையும் வைத்து இருக்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 295 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement