• Apr 26 2024

நடிகர் கருணாஸின் மகனை தெரியும்..மகளை பார்த்துள்ளீர்களா..வெளியான குடும்ப புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கருணாஸ். அதன்பிறகு காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவர் காமெடியனாக மட்டுமன்றி  கதாநாயகனாகவும்  சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் கார்த்தியின் விருமன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.

கருணாஸ் மனைவி கிரேஸ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3ல் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் பைனல் வரை முன்னேறினார். இருப்பினும் டைட்டில் ஜெயிக்கவில்லை.



கருணாஸின் மகன் கென் கருணாஸ் தனுஷின் அசுரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அதற்கு பின்னர் அவர் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தற்போது அவர் தனுஷின் வாத்தி படத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.




தற்போது கருணாஸ் தனது  மகள் மகன் மற்றும் மனைவியுடன் மொத்த குடும்பமும் மறைந்த பாடகர் எஸ்பிபி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.



Advertisement

Advertisement

Advertisement