பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்த 7ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ஜவான்.அட்லி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்படம்படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் முன்னதாக இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விஜய்யின் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அட்லிக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய புரிதல் உள்ளதால், விஜய் கண்டிப்பாக இத் ரோலில் நடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் இது எதுவும் நடக்காததால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் இயக்குநர் அட்லி மனம் திறந்துள்ளார். ஜவான் படத்தின் முதல் நாள் சூட்டிங் துவங்கியதில் இருந்து, காட்சி அமைப்புகள், ஷெட்யூல்கள் உள்ளிட்டவை குறித்து தான் அடுத்தடுத்து விஜய்யிடம்தான் ஆலோசனை கேட்டதாகவும் அவர் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும் அட்லி கூறியுள்ளார்.
மேலும் விஜய்யுடன் விரைவில் இணைவேன் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ள அட்லி, தான் இதுவைர இயக்கியுள்ள 5 படங்களில் 3 படங்கள் விஜய்யுடன் இணைந்துள்ளதாகவும், அவர் எப்போதும் தன்னுடைய வளர்ச்சியில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் ஷாருக்கை இணைத்து தான் புதிய கதையை எழுதவுள்ளதாகவும் இது விரைவில் நடக்கும் என்றும் அட்லி கூறியுள்ளார்.
Listen News!