• Dec 04 2023

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான் ஷாலினி.இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம் எனப் பல படங்களில் நடித்திருக்கின்றார்.


 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதோடு தற்பொழுது சினிமாவிலிருந்து விலகி விட்டார்.சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் ஷாலின தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.


இன்று நடிகை ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ஷாலினியின் சொத்து சொந்தமாகவே ரூ. 50 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை ஷாலினியின் கணவர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement