• Jan 19 2025

தனது மகளுக்கு மாரிமுத்து அனுப்பிய இறுதி வாழ்த்து பதிவு என்ன தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடர் மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.

பல்வேறு தமிழ் படங்களில் நடித்தும், உதவி இயக்குநராக மாரிமுத்து பணியாற்றியிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் அவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது.


இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இவருக்கு அடுத்ததாக தற்பொழுது குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் தனது மகள் ரோலில் நடித்த நடிகை மோனிஷாவுக்கு நடிகர் மாரிமுத்து இறக்கும் முன் ஒரு வீடியோவை அனுப்பி வைத்திருக்கிறார்.

மோனிஷாவின் சகோதரி பிறந்தநாளை அவர் பிறந்தநாள் என எண்ணி மாரிமுத்து வாழ்த்து கூறி வீடியோ அனுப்பி இருக்கிறார். அதன் பின் பிறந்தநாள் இல்லை என தெரிந்ததும், உன் பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் ஆக வைத்துக்கொள் என கூறினாராம் மாரிமுத்து.

இன்று நடிகை மோனிஷாவுக்கு பிறந்தநாள், ஆனால் மாரிமுத்து உயிரோடு இல்லை. முன்பே அவர் அனுப்பிய வீடியோவை தற்போது அவர் உருக்கமாக இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement