• Jan 19 2025

நீ வந்து நின்னாலே மஜாதான்!- Deepfake வீடியோ சர்ச்சைக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடிக்க துவங்கி அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர். விஜய தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படம் இவரை தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.


தொடர்ந்து அவருடன் சில படங்களில் நடித்தார். அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கவே ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறி முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.


தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து விஜய்யின் தீவிர ரசிகையான இவர் அவருடன் இணைந்து வாரிசு என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.


தொடர்ந்து படங்களிலும் பிஸியாக இவர் நடித்து வரும் நிலையில் அண்மையில் ராஷ்மிகா மந்தனா அரை நிர்வாண உடையில் லிப்டுக்குள் வருவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த  வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என பிரபலங்களும் தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.



இதனால் கடும் குழப்பத்தில் இருந்த ராஷ்மிகா மந்தனா தற்பொழுது அதிலிருந்து மீண்டு வந்ததோடு சமூக வலைத்தளத்தில் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement