• May 08 2024

விக்ரமின் 62வது படத்தை இயக்கவுள்ள இயக்குநர் யார் தெரியுமா?- வெளியாகிய மாஸ் அப்டேட்

stella / 6 months ago

Advertisement

Listen News!

சேது என்ற படத்தின் மூலம்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் சியான் விக்ரம். இப்படத்தைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து நடிக்க ஆரம்பித்தார். 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்தப் படத்தின் முதல் பாகமும் மிகப்பெரிய வசூலையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். படம்அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீசாகவுள்ளது. 

படத்தின் டீசர் வரும் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்தப் படங்களை தொடர்ந்து விக்ரமின் அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் விக்ரமின் 62 வது படத்தை இயக்குனர் எஸ் யூ அருண் குமார் இயக்கவுள்ளாராம். அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

எஸ் யூ அருண் குமார் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும்  குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement