• Apr 27 2024

அடேங்கப்பா... ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா... அதுவும் யாரோட படம் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சங்கர். தொட்டதெல்லாம் தங்கம் என்று கூறுமளவிற்கு இவர் எந்தப் படத்தை இயக்கினாலும் அப்படம் வெற்றிப் படமாக மாறி விடுகின்றது. அந்தவகையில் இவரின் இயக்கத்தில் தற்போது 'RC 15' மற்றும் 'இந்தியன் 2 'ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. 


இப்படங்களில் தெலுங்கின் பிரபல நடிகரான ராம் சரண் - கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் 'RC 15'. படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் இதுவரை இப்படத்திற்கு தலைப்பு எதுவும் வைக்கவில்லை. 

மேலும் இப்படமானது ரூ. 150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அத்தோடு இப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.


அதுமட்டுமல்லாது இப்படத்தின் உடைய அடுத்த கட்டப் படப்பிடிப்பு நியூசிலாந்தில் பாடல் காட்சியுடன் தொடங்குகிறது என தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் இப்பாடல் காட்சிக்கு மட்டுமே சுமார் ரூ. 15 கோடி செலவு எனவும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் உடைய ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிக்காக ரூ. 10 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடி செலவழிப்பது என்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement