• May 18 2024

தமது மேக்கப் மேனுக்கு சமந்தாவும் நயன்தாராவும் ஒரு நாள் சம்பளமாக எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகைகளாக வலம் வருபவரகள் தான் சமந்தா மற்றும் நயன்தாரா. சினிமாப் பின்புலமின்றி தமது கடுமையான முயற்சியினால் முன்னணி நடிகைகளாக உயர்ந்திருக்கும் இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் சோலோ ஹுரோயினாகவும் நடித்து வருகின்றார்கள்.அத்தோடு இவ்கள் இருவரும் இணைந்து காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.


இப் படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.இந்நிலையில் டாப் நடிகைகளான இவர்கள் இருவரின் மேக் அப் உதவியாளர்களுக்கு தரப்படும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் மேக் அப் உதவியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 55,000 சம்பளம், சமந்தாவின் உதவியாளருக்கு ரூ. 40,000 சம்பளம் என சொல்லப்படுகிறது.  

மேலும் நயன்தாரா ஜவான் திரைப்படத்திலும் சமந்தா, யசோதா சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement