• Sep 27 2023

வெளியாகிய முதல் நாளிலேயே ஜவான் திரைப்படம் பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?- செம குஷியில் படக்குழு

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

ஷாருக்கான், விஐய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் இன்று (செப்டம்பர் 7) நாடு முழுவதும் வெளியானது. இதனால் இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்ததாக கூறுகின்றனர்.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பு, விஜய் சேதுபதியின் வில்லனிசம் சிறப்பாக இருந்ததாக மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியத் திரைப்படமாக இது வெளியாகியுள்ளது.


மேலும் இந்தத் திரைப்படம் ஒரே நாளில் 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இப்படம் கடார்- 2 வசூல் சாதனையை  முறியடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement