• Apr 15 2026

மம்முட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல் தி கோர்' திரைப்படம் இதுவரை பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா,மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' என்ற படத்தில் நடித்திருந்தார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியிருந்தார். 

இந்தத் திரைப்படம் 23 ம் தேதி வெளியானதோடு,ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் காதல் தி கோர் திரைப்படம் அமைந்துள்ளதால், இப்படத்திற்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில் இப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர போன்ற நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.      


Advertisement

Advertisement