• Sep 26 2023

நடிகர் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஜெயம் என்னும் திபை்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ஜெயம் ரவி.இப்படத்தினை இவரது அண்ணனான மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என வரிசையாக ஜெயம் ரவியை வைத்து ஹிட் படங்களை கொடுத்தார் ராஜா.

 இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியாக இவர் மனிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் சைரன், இறைவன், தனி ஒருவன் 2 போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.


நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இவரது  சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.93 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வனுக்கு முன்னர் வரை ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வந்த ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் தற்போது ரூ.8 முதல் 10 கோடி வரை வாங்கி வருகிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement