விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் தமிழ் வீட்டில் தங்கி இருக்கும் கோதை சீக்கிரமாகவே காலையில் எழுந்து வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட, சரஸ்வதி வந்த என்ன அத்தை எல்லாத்தையும் நீங்க எதுக்கு பண்ணினீங்க என்று கேட்கின்றார். பின்னர் கோதை போட்டுக் கொடுத்த டீயை தமிழ் வாங்கிக் குடிப்பதை பார்த்த கோதை சந்தோசப்படுகின்றார்.
தொடர்ந்து வீடு வாடகைக்கு விடும் ஒருவர் வந்து இரண்டு, மூன்று வீடு இருக்கு நீங்க அதை வந்து பார்த்தீங்க என்றால் கொடுத்திடலாம் என்று சொல்ல, நடேசன் வீடா எதுக்குடா என்று கேட்க எத்தனை நாளாத் தான் நீங்க இங்க சமாளிக்க முடியும் அது தான் வீடு பார்த்திருக்கிறேன் என்று சொல்கின்றார்.
அப்போது கோதை வசதி என்பது பெரிய வீட்டில இருக்கிறது இல்லை பிடிச்சவங்களோட வாழுறது தான். எல்லோரும் ஒன்றாக இருக்கனும் என்று தானே இங்கே வந்தோம். அப்பிடித் தானே கூட்டிட்டு வந்தீங்க என்று சொல்ல எல்லோரும் சந்தோசப்பட தமிழ் யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!