• Sep 22 2023

அடேங்கப்பா.. வசூலில் சிகரம் தொட்ட சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

காமெடியனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது நாயகனாகவும் அசதி வருகின்றார். அந்தவகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற படம் வெளியானது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாசூம் சங்கர், ஃபெசி விஜயன்,  மாறன், பிரதீப் ராவத், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் எனப் பலரும் நடித்துள்ளனர்.


மேலும் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமாக  இப்படம் அமைந்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த இப்படமானது வெளியான நாளிலிருந்து சிறந்த விமர்சனங்களையும், அமோக வசூலையும் வாரிக் குவித்து வருகின்றது. 


இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி வெளிவந்த இப்படத்தினுடைய வசூல் விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இதுவரை உலகளவில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்து சந்தானத்தின் DD returns திரைப்படம் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement