• May 01 2024

நாளுக்கு நாள் எகிறும் 'மாமன்னன்' வசூல்... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடிக்கின்றனர். 


மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இப்படமானது கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.


அந்தவகையில் இப்படமானது முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வரை வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாகி 4நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் மொத்தமாக ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement