• May 11 2024

பல கோடி வசூலை வாரிக்கொடுத்த 'சித்தா' திரைப்படம்... இதுவரை செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கத்திலும், நடிகர் சித்தார்த் மற்றும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிப்பிலும் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'சித்தா'.


இப்படம்  பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய கதையை எதார்த்தமாக கொண்டு வெளிவந்திருக்கின்றது. இப்படத்தை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்குப் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தனர். அத்தோடு இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில், படத்தின் பட்ஜெட்டுக்கு இரண்டு மடங்கு வசூலித்து சாதனை படைத்துள்ளது.


அந்தவகையில் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இரண்டு மடங்கு லாபம் பெற்றுள்ளது. அதாவது 5 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement