சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் வெளியாகி 5நாட்களை எட்டியுள்ளது. வெளியான நாளிலிருந்து இன்றுவரை சிறந்த வரவேற்பினையும், அமோக வசூலினையும் ஈட்டி வருகின்றது. அதுமட்டுமல்லாது தியேட்டர்களிலும் சன நெரிசல்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிலையில் ஜெயிலர் படம் வெளிவந்து ஐந்து நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எனவே இப்படமானது ரஜினிக்கு மட்டுமல்லாது, இயக்குநர் நெல்சனுக்கும் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!