• Dec 09 2022

தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு டிடி என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா..வெளியானது சுவாரஸ்ய தகவல்.!

dd
Listen News!
Aishu / 2 months ago
image
Listen News!

விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான டிடி, தனது பெயர் குறித்து சுவாரசியமானத் தகவலை கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். தன்னுடைய திறமையாலும், சுட்டித்தனமான பேச்சாலும், அழகாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார் என்று தான் கூற வேண்டும்.



விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். எனினும் இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக  தொகுத்து வழங்கி உள்ளார்.மேலும்   இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.



விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால், அவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்குகிறார்.அத்தோடு  சமீபத்தில் நயன்தாராவை இன்டர்வியூ எடுத்திருந்தார். அதன் பின் ஆர்.ஆர்.ஆர் பட ப்ரோமாஷனுக்காக ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை இன்டர்வியூ எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறு இருக்கையில்,ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிடி, அப்போது தொகுப்பாளர் டிடின்னு பெயர் வந்தது எப்படி என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ஸ்கூல் படிக்கும் போதே டிடின்னு என்னை கூப்பிட ஆரம்பித்தார். ஸ்கூல் புக்கில் திவ்யதர்ஷினி என்று எழுத கஷ்டமாக இருந்ததால் டிடி என்று சுருக்கி எழுத தொடங்கினேன் அப்போதிலிருந்தே என்னை டிடி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், தொகுப்பாளினியான பிறகு என்னை டிடின்னு கூப்பிட்டது தொகுப்பாளர் தீபக் தான் அதன் பிறகு அதுவே நிறந்தரமாக ஆகிவிட்டது என்றார்.