• May 18 2024

சிறந்த நடிகையாக உங்களுக்கு தெரியும்-மாணவி சமந்தாவின் சாதனை பற்றி தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது யசோதா, குஷி, சகுந்தலம் என மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அடுத்தபடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

மேலும் இவரின் பிரிவிற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள தற்போதும் கூட ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

கணவரின் பிரிவிற்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவின், மதிப்பெண் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமந்தா நடிப்பில் மட்டுமின்றி படிப்பிலும் சூப்பர் என்று கூறும் அளவிற்கு அவரது மதிப்பெண் உள்ளது.

ஆம் பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் சமந்தா 1000 மார்க்கு 887 மதிப்பெண் எடுத்து முதல் ரேங்க் எடுத்துள்ளார்.

மேலும் இவரைக் குறித்து அந்த ரிப்போர்ட்டில், பள்ளியின் சொத்து என்றும் ஆசிரியர் பதிவிட்டு கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் சமந்தாவை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement