• May 19 2024

வாலி படப் பாடலை இப்படியா பண்ணுவீங்க- வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

1999ம் ஆண்டு எஸ்.ஏ.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் வாலி. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

அஜித்தின் கெரியரில் இது முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் திரையரங்கில் 100நாட்களுக்கு மேல் ஒடி சாதனைப்படைத்தது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய பாடல் தான் "நிலவை கொண்டு வா..கட்டிலில் கட்டி வை" இந்த பாடலை முனுமுனுக்காதே 90ஸ் கிட்ஸ்களே இல்லை என்று சொல்லலாம்.

ஹிட்டான பாடல்களை எல்லாம் தற்கால மீம்ஸ் கிரியேட்டர்ஸ் முதல் வீடியோ எடிட்டர்கள் வரை எதையாவது புதுசு புதுசா யோசித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். பொதுவாக ஒரு படத்தில் பாட்டே, வசனமே ஹிட்டானால் அதைவைத்து பல வீடியோவுடன் இணைந்து வேறுவிதமான வீடியோ ஒன்றை உருவாக்கி டிராண்டாக்கி விடுவார்கள்.

https://twitter.com/iam_SJSuryah/status/1547527101519216641

அந்த வகையில் தற்போது தேவாவின் இசையில் அனுராதா ஶ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் துள்ளல் குரலில் பாடிய நிலவைக் கொண்டு வா பாடலை விக்கல்ஸ் யூடியூபினர் வெச்சு செய்திருக்கிறார்கள். அனுராதா ஶ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் பாடுவது போல வெறுவிதமாக எடுத்து அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்கவைத்துள்ளனர். இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement