• May 12 2024

இயக்குநர் சுதா கொங்கராவுக்கு திடீரென 2 விருது…இது என்ன புதுசா கிடக்கு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

68வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. மொத்தம் 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி, அதில் இருந்து சிறந்த படங்களுக்கும், அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும் இந்தப் பட்டியலில் தமிழில் இருந்து சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா ஆகிய படங்களில் பல பிரிவுகளில் விருதுக்கு தேர்வாகி இருந்தன.

ஜூலை மாதம் மத்திய அரசு அறிவித்திருந்த விருது பட்டியலில் சூரரைப் போற்று படத்துக்கு மொத்தம் 5 பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்கான விருது சூர்யா, சிறந்த நடிகையா அபர்ணா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ்குமார், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா இருவருக்கும் எனவும், சிறந்த திரைப்படம் என்ற பிரிவிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சூரரைப் போற்று படத்துக்கு 5 பிரிவுகளில் தேசிய விருது என தகவல் வெளியாகி இருந்தன.

இவ்வாறுஇருக்கையில், இன்று டெல்லியில் நடைபெற்ற 68வது தேசிய விருது விழாவில் சூரரைப் போற்று படக்குழுவினருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே வெளியான அறிவிப்புகளின் படி 5 விருதுகள் கொடுக்கப்பட்டன.

அத்தோடு  யாரும் எதிர்பாரதவிதமாக சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதை, இயக்குநர் என இரண்டு விருதுகள் கிடைத்தன. அதாவது சிறந்த படத்துக்கான விருதை சூரரைப் போற்றுவின் தயாரிப்பாளராக ஜோதிகாவும் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநரான சுதா கொங்கராவுக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டது


முன்னதாக சிறந்த திரைப்படங்களுக்கான விருது பட தயாரிப்பாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறுஇருக்கையில், தற்போது சிறந்த திரைப்படத்துக்கான விருது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் சேர்ந்து வழங்கப்படுகிறது. 



இதனால், திடீரென சூரரைப் போற்று படத்துக்கு ஆறு விருதுகள் எப்படி கிடைத்தது என்ற ரசிகர்களின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அத்தோடு  சிறந்த இயக்குநருக்கான விருது மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குநர் சச்சிக்கு வழங்கப்பட்டது. மறைந்த இயக்குநர் சச்சிக்கு பதிலாக அய்யப்பனும் கோஷியும் படக்குழுவினரின் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement