• Jan 19 2025

விஜய்யை வெறுப்பேத்த ரஜினிக்கு 300 கோடி ரூபாய் சம்பளம்: ’வாரிசு’ தயாரிப்பாளரின் அதிரடி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

அஜித், விஜய் போட்டி எல்லாம் பழைய கதையாகி தற்போது ரஜினி, விஜய் போட்டி மாறி உள்ள நிலையில் ரஜினியை விட அதிக சம்பளம் விஜய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து ’தளபதி 69 ’ படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யை வைத்து ’வாரிசு’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு அந்த படம் சரியாக போகாததால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த நஷ்டத்திற்கு முக்கிய காரணம் விஜய்யின் அதிக சம்பளம் தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் புலம்பி கொண்டிருந்த நிலையில் தற்போது விஜய்யை வெறுப்பு ஏற்றுவதற்காக ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு அவர் ரஜினிக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் மீண்டும் ரஜினி தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்றும் வசூலில் மட்டுமல்ல சம்பள விவகாரத்திலும் அவர்தான் நம்பர் ஒன் என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீம்புக்காக அவர் 300 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் தில் ராஜு படத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தின் இயக்குனர் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு மிகவும் பிரபலமானவர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement